உலகம்

பிலிப்பின்ஸ்: படகு தீ விபத்தில் 7 பேர் பலி

25th May 2022 07:07 PM

ADVERTISEMENT


பிலிப்பின்ஸ் நாட்டில் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 

பிலிப்பின்ஸில் 157 பயணிகளுடன் எம்.வி.மெர்கிராஃப்ட் என்ற படகு புறப்பட்டது. மணிலாவை சென்றடைய 60 கிலோ மீட்டர்கள் இருந்த நிலையில் இந்த படகில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்களை தற்போது பிலிப்பின்ஸ் கடோலாரக் காவல் படை பகிர்ந்துள்ளது.

விபத்து குறித்து கடலோரக் காவல் படை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

"இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் சரியாகத் தெரியவில்லை. இந்த விபத்தில் 5 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். 23 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதுவரை 120 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

இந்த படகு பிலிப்பின்ஸின் தென்கிழக்கு பகுதியிலுள்ள போலிலோ தீவிலிருந்து ரியல் என்ற நகரத்தினை நோக்கிச் சென்றுள்ளது. அதிகாலை 5 மணியளவில் இந்தப் படகில் திடீரென தீப்பற்றத் தொடங்கியுள்ளது. அதன் பின் 6.30 மணிக்கு இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. 5 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும்."

ADVERTISEMENT
ADVERTISEMENT