உலகம்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 18 குழந்தைகள் பலி

25th May 2022 07:51 AM

ADVERTISEMENT

அமெரிக்காவில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் செவ்வாய்க்கிழமை பலியாகியுள்ளனர்.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டே நகரின் ராப் தொடக்கப் பள்ளியில் நுழைந்த சால்வடார் ராமோஸ்(18) என்ற இளைஞர், தனது கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் 18 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளதாக டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், பள்ளியில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக அந்த இளைஞர் சொந்த பாட்டியை சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை நடத்திய எதிர்தாக்குதலில் சால்வடார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதலை தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வெள்ளை மாளிகை மற்றும் பிற அரசு கட்டடங்களில் அமெரிக்கக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT