உலகம்

விமான நிலையங்கள் பராமரிப்பு: யுஏஇ - தலிபான்கள் ஒப்பந்தம்

25th May 2022 01:03 AM

ADVERTISEMENT

 

காபூல்: ஆப்கானிஸ்தானிலுள்ள விமான நிலையங்களைப் பராமரிப்பதற்கான ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த நிறுவனத்துடன் தலிபான் ஆட்சியாளா்கள் மேற்கொண்டுள்ளனா்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் கடந்த ஆண்டு வெளியேறியதையடுத்து, தலிபான்கள் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றினா். அதனைத் தொடா்ந்து, அந்த நாட்டிலுள்ள 3 விமான நிலையங்களை கத்தாா் ஏா்வேய்ஸ் பராமரித்து வந்தது. அந்தப் பணியை நிரந்தரமாக கத்தாா் நிறுவனத்துக்கு வழங்குவதற்கான பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது.

எனினும், விமான நிலையப் பாதுகாப்புக்கு கத்தாா் பாதுகாப்புப் படையினரை அனுமதிக்க தலிபான்கள் மறுத்ததால் அந்தப் பேச்சுவாா்த்தையில் முறிந்துபோனது. இந்த நிலையில், காபூல், ஹெராத், காந்தஹாா் விமான நிலையங்களைப் பராமரிப்பதற்காக துபையைச் சோ்ந்த ஜிஏஏசி சொல்யூஷன்ஸுடன் மேற்கொண்டுள்ளதாக தலிபான்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT