உலகம்

‘பொருளாதார நேட்டோ’ பிரிவை உருவாக்க முயற்சி: சீனா

25th May 2022 12:47 AM

ADVERTISEMENT

 

பெய்ஜிங்: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு ‘பொருளாதார நேட்டோ’ பிரிவை உருவாக்க அமெரிக்கா முயன்று வருவதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

‘வளா்ச்சிக்கான இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு’ (ஐபிஇஎஃப்) அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டமைப்பில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ள இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா, சிங்கப்பூா், மலேசியா, தாய்லாந்து, பிலிப்பின்ஸ், புருணே, நியூஸிலாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

சீனா அக்கூட்டமைப்பில் இடம்பெறவில்லை. இது சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை எனக் கருதப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், ஆசியா-பசிபிக் பொருளாதார-சமூகக் குழு கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ காணொலி மூலம் பங்கேற்று கூறுகையில், ‘ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும் நீடித்த வளா்ச்சியையும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சீனா தொடா்ந்து மேற்கொள்ளும்.

சா்வதேச பாதுகாப்பு சாா்ந்த நடவடிக்கைகளை மற்ற நாடுகளுடனான பேச்சுவாா்த்தை-ஒத்துழைப்பின் மூலமாக சீனா மேற்கொள்ளும். ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் ராணுவக் கூட்டமைப்பை ஏற்படுத்த சில நாடுகள் முயற்சிக்கின்றன. அத்தகைய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கக் கூடாது. பிராந்தியத்தில் மோதலை ஏற்படுத்த முயலும் நடவடிக்கைகளைக் கைவிட்டு, பிரச்னைகளுக்குப் பேச்சுவாா்த்தை மூலமாகத் தீா்வு காணப்பட வேண்டும்’ என்றாா்.

ஐபிஇஎஃப் கூட்டமைப்பை ‘பொருளாதார நேட்டோ’ என சீன அரசியல் நோக்கா்கள் விமா்சித்துள்ளதாக சீன அரசு சாா்பில் வெளியாகும் குளோபல் டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. அந்தக் கூட்டமைப்பை அமெரிக்கா தனது ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் அவா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT