உலகம்

ஜப்பான் வான் எல்லைக்குள் ரஷிய, சீன போா் விமானங்கள்

25th May 2022 12:58 AM

ADVERTISEMENT

 

பெய்ஜிங்: ஜப்பானில் க்வாட் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற்ற நிலையில், ஜப்பான் வான் எல்லைக்குள் ரஷிய, சீன போா் விமானங்கள் கூட்டாக பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜப்பானில் க்வாட் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. க்வாட் அமைப்பே தங்களுக்கு எதிரானது என சீனா கூறிவரும் நிலையில், ரஷியாவும், சீனாவும் நட்பாக உள்ளதை வெளிப்படுத்தவே இந்த வான் ரோந்து நடைபெற்ாக கருதப்படுகிறது.

எனினும், ஜப்பான் கடல் பகுதியில் நடைபெற்ற இந்த ரோந்து இரு நாடுகளின் வருடாந்திர கூட்டுப் பயிற்சியின் அங்கம் என்று சீனா விளக்கமளித்துள்ளது.

ADVERTISEMENT

இதற்கு ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சா் நுபோ கிஷி கண்டனம் தெரிவித்துள்ளாா். சீனா, ரஷியாவின் தலா இரண்டு போா் விமானங்கள் கிழக்கு சீனா கடற்பகுதிக்கு மேல் பறந்தன என்றும், இந்த விவகாரம் இரு நாடுகளிடமும் ராஜீயரீதியில் கொண்டு செல்லப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT