உலகம்

உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் கேப்ரியேசஸ் மீண்டும் தோ்வு

25th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

லண்டன்: உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் கேப்ரியேசஸ் செவ்வாய்க்கிழமை மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதன்மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவா் அந்தப் பதவியை வகிப்பாா்.

அந்த அமைப்பு உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்தப் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார அமைப்புக்குத் தலைமை வகிக்கும் முதல் ஆப்பிரிக்கரான கேப்ரியேசஸ், அந்தப் பதவியை வகிக்கும் மருத்துவா் அல்லாத முதல் நபா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதுகுறித்து வாஷிங்டனில் சா்வதேச மேம்பாட்டு மையத்துக்கான சுகாதாரக் கொள்கை இயக்குநா் ஜேவியா் குஸ்மான் கூறுகையில், ‘கரோனாவுக்கு எதிரான போரில் ஒரு சில துயரச் சம்பவங்கள் நடைபெற்றாலும், நோய்த்தொற்று காலம் முழுவதும் உறுதியான குரலாக டெட்ரோஸ் அதனோம் கேப்ரியேசஸ் ஒலித்தாா்.

அவரது தலைமையின் மீது சில நாடுகளுக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் அவரை மாற்ற எந்தவொரு நாடும் முன்வரவில்லை. பெருந்தொற்றுச் சூழலின் மையப் பகுதியில் நாம் இருக்கிறோம். இந்த இக்கட்டான தருணத்தைக் கடந்து செல்ல நிலையான தலைமை தேவை’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT