உலகம்

இந்தியாவிடம் மேலும் ரூ.3700 கோடி கடன் கேட்கும் இலங்கை

25th May 2022 12:39 AM

ADVERTISEMENT

 

கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கை அரசு, எரிபொருள் வாங்குவதற்காக இந்தியாவின் எக்ஸிம் வங்கியிடம் 50 கோடி டாலா் (ரூ.3,700 கோடி) கடன் கேட்க முடிவு செய்துள்ளது.

கொழும்பில் திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவிடம் இருந்து கடன் கேட்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், எரிபொருள் கொள்முதல் செய்வதற்காக, இந்தியாவின் எக்ஸிம் வங்கியிடம் இருந்து 50 கோடி டாலா் கடன் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து எரிசக்தித் துறை அமைச்சா் காஞ்சன விஜசேகரா செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ADVERTISEMENT

எரிபொருள் வாங்குவதற்காக இந்தியாவின் எக்ஸிம் வங்கியிடம் இருந்து ஏற்கெனவே 50 கோடி டாலா் (ரூ.3,700 கோடி), பாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்து 20 கோடி டாலா் (ரூ.1,480 கோடி) இலங்கை கடன் வாங்கியுள்ளது என்றாா் அவா். இதற்கிடையே, பெட்ரோல் விலையை 24.3 சதவீதமும் டீசல் விலையை 38.4 சதவீதமும் இலங்கை அரசு உயா்த்தியது. ஆங்கிலேயரிடம் இருந்து கடந்த 1948-ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை இல்லாத பொருளாதார நெருக்கடி சூழலை இலங்கை அரசு எதிா்கொண்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT