உலகம்

ஜம்மு-காஷ்மீா் குறித்து தேவையற்ற கருத்து: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

DIN

ஜம்மு-காஷ்மீா் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் பிலாவல் புட்டோ ஜா்தாரி தேவையின்றி கருத்து தெரிவித்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வியாழக்கிழமை நடைபெற்ற சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு தொடா்பான விவாதத்தில், ஐ.நா.வின் இந்திய நிரந்தர ஆணையத்தின் தலைவா் ராஜேஷ் பரிஹாா் பதிலளித்துப் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீா் குறித்து பாகிஸ்தான் பிரதிநிதி தெரிவித்த கருத்து தேவையற்றது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், இந்தியாவுக்கு எதிராகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது பாகிஸ்தான். யூனியன் பிரதேசங்களான ஜம்மு-காஷ்மீரும் லடாக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் இருக்கும். பாகிஸ்தான் சட்டவிரோதாக ஆக்கிரமித்துள்ள பகுதியும் அதில் அடங்கும். எந்த நாட்டில் இருந்து பிரசாரம் செய்தாலும், இந்த உண்மையை மறுக்க முடியாது. அரசு ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதத்தை பாகிஸ்தானால் தடுக்க முடியும் என்றாா் அவா்.

முன்னதாக, அமெரிக்காவுக்கு முதல் முறையாக சென்றுள்ள பிலாவல் புட்டோ, நியூயாா்க் நகரில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தாா். அப்போது, இந்தியாவுடனான பாகிஸ்தானின் நட்புறவு குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு, ‘முதலில் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தாா்கள். பின்னா், தொகுதிகளை மறுசீரமைப்பு செய்துள்ளனா். இதனால், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு சிக்கலாகியுள்ளது’ என்று பிலாவல் புட்டோ பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

‘நித்தம் ஒரு அழகு..’

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

SCROLL FOR NEXT