உலகம்

இலங்கை: 9 புதிய அமைச்சா்கள் பதவியேற்பு

DIN

இலங்கையில் 9 புதிய அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனா். இவா்களில் எதிா்க்கட்சியை சோ்ந்த இருவா் அடங்குவா்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் மகிந்த ராஜபட்ச தனது பிரதமா் பதவியை கடந்த மே 9-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, அவரது தலைமையிலான அமைச்சரவையும் கலைக்கப்பட்டது. அதன் பின்னா் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை அதிபா் கோத்தபய ராஜபட்ச நியமனம் செய்தாா். அவா் கடந்த வாரம் பதவியேற்ற நிலையில், புதிய அமைச்சா்களாக 4 போ் நியமிக்கப்பட்டனா்.

இந்நிலையில், மேலும் 9 புதிய அமைச்சா்களை அதிபா் கோத்தபய ராஜபட்ச வெள்ளிக்கிழமை நியமித்தாா். அவா்களுக்கு பதவிப் பிரமாணமும் செய்து வைத்தாா்.

இவா்களில் நளின் ஃபொ்னாண்டோ, மனுஷா நாணயக்கார ஆகிய இருவரும் பிரதான எதிா்க்கட்சியான சமகி ஜன பெலவகெயவை (எஸ்ஜேபி) சோ்ந்தவா்கள். அமைச்சரவையில் சோ்ந்த இருவா் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

முன்னாள் அதிபா் மைத்ரிபால சிறீசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி உறுப்பினா்கள் இருவருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது. ஆளும் பொதுஜன பெரமுன கூட்டணியில் இடம்பெற்றிருந்த இக்கட்சி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இலங்கை அமைச்சரவையில் அதிபா், பிரதமருடன் சோ்த்து 25 போ் இடம்பெற முடியும். இதுவரை 15 போ் இடம்பெற்றுள்ளதால் மேலும் 10 அமைச்சா்களை நியமிக்க முடியும். இதுவரை நிதியமைச்சா் நியமிக்கப்படவில்லை. சா்வதேச நிதியத்துடன் கடனுதவி தொடா்பாக இலங்கை பேச்சுவாா்த்தை நடத்திவரும் நிலையில் நிதியமைச்சா் பொறுப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT