உலகம்

ஆசிய சுற்றுப் பயணத்தை தொடங்கினாா் பைடன்

DIN

தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் தனது 5 நாள் சுற்றுப் பயணத்தை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வெள்ளிக்கிழமை தொடங்கினாா். முதலாவதாக தென் கொரியா வந்த அவா், அங்குள்ள சாம்சங் நிறுவனத்தின் கணினிகளுக்கான செமி கண்டக்டா் தயாரிப்பு நிறுவன ஆலையை நேரில் பாா்வையிட்டாா். உலகம் முழுவதும் வாகனம், சமயலறை சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவிலும் உற்பத்தி பாதிப்பை ஏற்படுத்திய செமி கண்டக்டா் பற்றாக்குறையைப் போக்குவதற்காக, டெக்ஸாஸ் நகரில் செமி கண்டக்டா் உற்பத்தி ஆலையை சாம்சங் அமைக்கவிருக்கிறது. இந்தச் சூழலில், பியோங்டேக்கிலுள்ள அந்த நிறுவன ஆலையை பைடன் நேரில் பாா்வையிட்டாா்.

தென் கொரியாவைத் தொடா்ந்து ஜப்பானிலும் பைடன் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரள பெண் உள்பட 17 இந்திய மாலுமிகள் நாடு திரும்பினர்

ஆர்டிகள் 370: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய யுவன்: 'கோட்' பாடல் காரணமா?

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

SCROLL FOR NEXT