விலங்குகளின் குறும்பும் அது செய்யும் சேட்டைகளையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அதுபோன்ற சில ரசிக்கத்தக்க காட்சிகள் விடியோவாக பதிவாகும் போது அதிகம் பேரால் பகிரப்பட்டு வருவதும் வழக்கம்தான்.
ஒரு டிவிட்டர் பதிவில், விலங்குகள் பூங்காவில், உறங்கிக் கொண்டிருக்கும் பாண்டா கரடியை, பூங்கா பெண் ஊழியர் தட்டி எழுப்பி நொறுக்குத் தீனி கொடுக்கும் விடியோ வைரலாகப் பரவி வருகிறது.
இதையும் படிக்க..என்ன நடக்குது? 5 கிலோ 'மைக்ரோ பிட்' பேப்பர்: 11 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் நீக்கம்
எழுந்திரு.. எழுந்திரு.. என்று கேரட்டால் பாண்டா கரடியை குத்தி எழுப்புவதும், பாண்டா கரடியும் நம் வீட்டுப் பிள்ளைகள் போல உடலை லேசாக அசைத்தபடி எழ முயற்சித்துவிட்டு, அது முடியாமல் மீண்டும் ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்றுவிடுவது போல உறங்குவதும், மீண்டும் அந்த பெண் கேரட்டைக் கொண்டு எழுந்திரு என்று அசைக்க.. இம்முறை போனால் போகட்டும் என்று பாண்டா கரடி திரும்பி அவரைப் பார்க்க, ஒரு கையில் கேரட்டைக் கொடுக்கிறார் அப்பெண். சரி இதை வாங்கிக் கொள்வோம் என்று சலித்தபடி கேரட்டை வாங்க, மற்றொரு கைக்கு கிடைக்கிறது மிக ருசியான பிஸ்கெட். எவ்வளவுதான் சோம்பேறித்தனமாக இருந்தாலும் கிடைக்கும் பிஸ்கெட்டை விட்டுவிட முடியுமா என்ன? அதையும் வாங்கிக் கொள்கிறது பாண்டா கரடி. இந்த விடியோ பல லட்சம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க.. உதகை மலர்க்காட்சியில் என்ன ஸ்பெஷல்?
ஒரு வேளை அதனை நீங்கள் பார்க்கத் தவறியிருக்கலாம். எப்படி இதனை பார்க்காமல் இந்த நாள் முழுமையடையும் சொல்லுங்கள். ஒரு முறை விடியோவை நீங்களும் பார்த்துவிடுங்கள்.