உலகம்

இலங்கையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்பு: நிலைமை சரியாகுமா?

20th May 2022 04:19 PM

ADVERTISEMENT

கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. மக்களின் போராட்டம் காரணமாக பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்தார். 

இதையும் படிக்க | இலங்கையில் வசிக்கும் இந்தியா்கள் பதிவு செய்ய தூதரகம் வேண்டுகோள்

அதனைத் தொடர்ந்து புதிய பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை மறுகட்டுமானம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். 

ADVERTISEMENT

அந்த வகையில், முதல் கட்டமாக தனது அமைச்சரவையில் 4 அமைச்சா்களை அவா் சனிக்கிழமை நியமனம் செய்தார். இந்நிலையில் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் மேலும் 9 பேர் புதிதாக அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். சுற்றுலா, மருத்துவம், வர்த்தகம் உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  
 

ADVERTISEMENT
ADVERTISEMENT