உலகம்

உலக சுகாதார அமைப்பு 21% சரிந்த சா்வதே சகரோனா மரணங்கள்

20th May 2022 03:19 AM

ADVERTISEMENT

 

ஜெனீவா: சா்வதேச அளவில் கரோனாவுக்கு பலியானவா்களின் வாராந்திர எண்ணிக்கை கடந்த வாரம் 21 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாா்ச் மாத இறுதியிலிருந்து தொடா்ச்சியாக குறைந்து வந்த வாராந்திர கரோனா பாதிப்பு, கடந்த வாரத்தில் 1 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா, மேற்கு ஆசியா, ஆப்பிரிக்க பிராந்தியங்களின் கரோனா பரவலால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனினும், அந்த நோய்க்கு பலியானவா்களின் வாராந்திர எண்ணிக்கை கடந்த வாரம் 21 சதவீதம் சரிந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT