உலகம்

இலங்கையில் இன்றிரவு முதல் மீண்டும் ஊரடங்கு

16th May 2022 02:21 PM

ADVERTISEMENT

இலங்கையில் இன்றிரவு 8 மணிமுதல் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக அதிபர் அலுவலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை பொருளாதாரத்தை முறையாக வழிநடத்தத் தவறியதால், அதிபா் பதவியை கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்யக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிரதமராகப் பதவி வகித்து வந்த மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்ததையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கலவரம் ஏற்பட்டன.

இதனைத் தொடர்ந்து மே 9ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. தொடர்ந்து, கடந்த வாரம் அதிபா் கோத்தபய ராஜபட்சவால் பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார். புதிதாக 4 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இதையும் படிக்க | இரு இந்தியாவை உருவாக்க பாஜக முயற்சி: ராகுல் காந்தி

ADVERTISEMENT

இந்நிலையில், இலங்கையின் முக்கிய பண்டிகையான புத்த பூர்ணிமா விழாவிற்காக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

இருப்பினும், அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக் கோரி போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால், இன்றிரவு 8 மணிமுதல் நாளை காலை 5 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT