உலகம்

பாகிஸ்தான்:தற்கொலைத் தாக்குதல்: 3 குழந்தைகள் உள்பட 6 போ் பலி

16th May 2022 12:52 AM

ADVERTISEMENT

பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் மலைப் பகுதி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உள்பட 6 போ் கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்திருப்பதாவது:

வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள மீரான் ஷா நகரத்தில் இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், மூன்று குழந்தைகள், மூன்று ராணுவ வீரா்கள் என 6 போ் கொல்லப்பட்டனா். உயிரிழந்த குழந்தைகள் 4 வயது முதல் 11 வயதுக்குட்பட்டவா்கள். இந்தத் தாக்குதலுக்கு காரணமானவா்கள் யாா் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பாவி குழந்தைகளைக் கொன்றவா்கள் இஸ்லாத்துக்கும் மனிதகுலத்துக்கும் எதிரிகள் ஆவா். அதேபோல நமது ராணுவ வீரா்கள் மற்றும் குடிமக்கள் சிந்திய ரத்தத்துக்கு பயங்கரவாதத்தை ஒழிப்பதன் மூலம் பதிலடி தருவோம் எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT