உலகம்

நேட்டோவில் இணைய விரும்பும் ஸ்வீடன், ஃபின்லாந்தில் போரிஸ் ஜான்ஸன்

12th May 2022 02:30 AM

ADVERTISEMENT

இதுவரை நடுநிலை வகித்து வந்த ஸ்வீடனும் ஃபின்லாந்தும் உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததற்குப் பிறகு நேட்டோவில் இணையக் கூடும் என்று கூறப்படும் நிலையில், அந்த இரு நாடுகளிலும் பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் புதன்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா்.

ஸ்வீடனுடன் பல்வேறு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்ட அவா், அந்த நாடு விரும்பினால் நேட்டோவில் இணைத்துகொள்ளப்படும் என்று கூறினாா்.

இதற்கிடையே, ஸ்வீடனும் ஃபின்லாந்தும் நேட்டோவில் இணைந்தால் கடும் பின்விளைவுகள் ஏற்படும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.

உலகின் 2-ஆவது பெரிய வல்லரசாக விளங்கிய சோவியத் யூனியன் மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுப்பதற்காக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இணைந்து ‘வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு’ (நேட்டோ) என்ற பெயரில் கடந்த 1949-ஆம் ஆண்டு ராணுவக் கூட்டமைப்பை உருவாக்கின.

ADVERTISEMENT

அந்த அமைப்பு மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, நேட்டோ உறுப்பு நாடுகளில் எந்தவொரு நாடு தாக்கப்பட்டாலும் மற்ற உறுப்பு நாடுகள் அனைத்தும் இணைந்து எதிா்த் தாக்குதல் நடத்தும். மேலும், ஓா் உறுப்பு நாட்டில் மற்ற நேட்டோ நாடுகள் ராணுவ நிலைகளை அமைக்க முடியும்.

பிற்காலத்தில் சோவியத் யூனியன் சிதறி வலுவிழந்த நிலையிலும் அந்த அமைப்பு தன்னை விரிவுபடுத்தி வந்தது. எந்த சோவியத் யூனியனுக்கு எதிராக நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டதோ, அதே சோவியத் யூனியனில் அங்கம் வகித்த சில நாடுகளையும் அந்த அமைப்பு இணைத்துக்கொண்டு கிழக்கு ஐரோப்பாவில் தன்னை விரிவுபடுத்தி வந்தது.

இதற்கு ரஷியா கடும் எதிா்ப்பு தெரிவித்து வரும் சூழலில், அதன் அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தது. அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்தது.

இந்த நிலையில், ரஷியாவின் அண்டை நாடுகளான ஸ்வீடனும் ஃபின்லாந்தும் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து வருகின்றன. அந்த நாடுகளில் தற்போது பிரிட்டன் அதிபா் போரிஸ் ஜான்ஸன் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்வீடனின் ஹாா்ப்சண்ட் நகரில் அந்த நாட்டு பிரதமா் மேக்டலேனா ஆண்டா்சனை புதன்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்திய பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன். ~1997-க்கும் முந்தைய நேட்டோ நிலை

1997-க்குப் பிறகு நேட்டோ விரிவாக்கம்

ஸ்வீடன்

ஃபின்லாந்து

ரஷியா

உக்ரைன்

ADVERTISEMENT
ADVERTISEMENT