உலகம்

இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்பு

12th May 2022 06:48 PM

ADVERTISEMENT


இலங்கை புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார்.

கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் புரட்சி காரணமாக பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபட்ச கடந்த திங்கள்கிழமை விலகிய நிலையில் இலங்கை பிரதமராக 6 முறையாகப் பதவியேற்றுக்கொண்டார் ரணில் விக்ரமசிங்கே.

மேலும் 15 பேர் அடங்கிய அமைச்சரவை நாளை (வெள்ளிக்கிழமை) பதவியேற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, அதிபர் கோத்தபய ராஜபட்ச மற்றும் விக்ரமசிங்கே ஆகியோர் புதன்கிழமை மாலை ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT