உலகம்

இந்தியாவுக்கு வலுவான எதிர்க்கட்சி தேவை: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேட்டி

12th May 2022 01:23 PM

ADVERTISEMENT


வாஷிங்டன்:  இந்தியாவில் எதிர்க்கட்சி மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், எதிர்க்கட்சியில் சரியான தலைமை இல்லாததால் ஜனநாயகம் ஜனநாயகமாகத் தோன்றவில்லை என்று சொல்லும் நிலை உள்ளதாகவும், ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு நாட்டில் வலுவான எதிர்க்கட்சி  அவசியம் என்று தான் நம்புவதாக இந்திய ஆன்மிகத் தலைவா் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவுக்கு சுற்றுலாச் சென்றுள்ள இந்திய ஆன்மிகத் தலைவரும், வாழும் கலை அறக்கட்டளையின் நிறுவனருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், அங்கு கரோனா தொற்றுக்கு பிந்தைய உலகில் அமைதி மற்றும் அதன் தேவை குறித்து பிரசாரம் செய்து வருகிறார். 

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இந்தியாவுக்கு ஆக்கபூர்வமான, வலுவான எதிர்க்கட்சி தேவை. எதிர்க்கட்சி (தற்போதைய) மிகவும் பலவீனமாக உள்ளது. எதிர்க்கட்சியில் தலைமை இல்லாததால், ஜனநாயகம் ஜனநாயகமாக இல்லை என்று சொல்லும் அளவுக்கு உள்ளது. 

"சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களின் மூலம், எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வர முடியும்; இந்திய அமைப்புகளில் தலையிட முடியாது என்பதை மேற்கு வங்கம் நிரூபித்துள்ளது, மேலும் நீதித்துறை மிகவும் வலுவாக உள்ளது. ஆனால், மத்தியில் எதிர்க்கட்சிக்கு வலுவான, சரியான தலைவர் இல்லாததால், நாடு எதேச்சாதிகாரம் போல தோன்றும், ஆனால் உண்மையில் அப்படி இல்லை. இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. மக்களிடம்தான் அதிகாரம் உள்ளது" என்று ரவிசங்கர் கூறினார்.

ADVERTISEMENT

இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயக நாடு என்றும், நாட்டில் நடைபெறும் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுகின்றன, தேசிய அளவில் வலுவான எதிர்க்கட்சி இருக்க வேண்டும் என்றும், அது தற்போது காணாமல் போய்விட்டது என்றும் கூறினார்.

மேலும் இந்தியாவின் டிஎன்ஏ எப்போதும் அமைதி மற்றும் அகிம்சையே வலியுறுத்தும் என்று கூறிய ரவிசங்கர், உக்ரைனில் நடக்கும் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து மேற்கு நாடுகளில் தவறான கருத்து நிலவுகிறது, அதில் உண்மையில் இல்லை.  

போருக்குப் பக்கபலமாக இருக்கிறோம் என்பது தவறான கருத்து. நாங்கள் அமைதிக்கான பக்கமே நிற்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கூறி வருகிறார் என்று ரவிசங்கர் கூறினார்.

இதையும் படிக்க | சீனாவில் ஓடுபாதையில் தீப்பிடித்து எரிந்த பயணிகள் விமானம்: 40க்கும் மேற்பட்டோர் காயம்

ADVERTISEMENT
ADVERTISEMENT