உலகம்

சீனாவின் ஷாங்காயில் ஹோட்டல்கள், மருத்துவமனைகளுக்குச் செல்ல கட்டுப்பாடு!

12th May 2022 01:13 PM

ADVERTISEMENT

சீனாவின் ஷாங்காய் நகரில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

கரோனா பாதிக்கப்பட்டவர்களும் முழுவதுமாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஏற்கெனவே பொது இடங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

ஹோட்டல்களில் இருந்து உணவு டெலிவரி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல மக்களும் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது. அரசால் அனுமதிக்கப்பட்ட உணவு டெலிவரி மட்டுமே நடைபெறும். 

ADVERTISEMENT

மேலும், மருத்துவமனைகளில் அவசர நிலைகளைத் தவிர மற்ற அனைவரும் மருத்துவனை செல்ல அனுமதி பெற வேண்டும். 

ஷாங்காய் நகரில் ஏற்கெனவே ஏறத்தாழ அனைத்து சுரங்க ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. ஏழாவது வாரமாக ஷாங்காயில் கரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க | உணவுக்காக பணம் கேட்ட சிறுவனை கொலை செய்த காவலர்! ம.பி.யில் கொடூரம்

ADVERTISEMENT
ADVERTISEMENT