உலகம்

பிரேசில் விமான விபத்தில் 2 பேர் பலி, 14 பேர் காயம்

12th May 2022 10:51 AM

ADVERTISEMENT

சாவோ பாவுலோ: பிரேசிலின் போயிடுவா நகரில் இலகுரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் புதன்கிழமை 2 பேர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரேசிலின் "தேசிய ஸ்கைடிவ் தலைநகர்" என்று அழைக்கப்படும் போயிடுவாவில் உள்ள ஸ்கைடைவ் சுற்றுலா நிறுவனத்திற்கு சொந்தமான இலகுரக விமானம் தேசிய ஸ்கைடிவிங் மையத்தில் இருந்து ஒரு பைலட் மற்றும் 15 ஸ்கைடைவர்களுடன் வியாழக்கிழமை  புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்ட சிறு நேரத்திலேயே வேகமாக தரையிறங்கும்போது தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 2 பேர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்தனர். 

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் காயமடைந்தவர்கள் அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளதாக தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

அதே நேரத்தில் விபத்து நடந்த இடத்தில் நிபுணர்கள் விசாரணை நடத்தி வருவதாக பிரேசிலிய விமானப்படை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து போயிடுவா மேயர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்கைடைவ் சுற்றுலா நிறுவனத்திற்கு சொந்தமானது விமான புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது வருத்தமாக  உள்ளது. 

"போய்டுவாவின் 50 ஆண்டுகால ஸ்கைடிவிங் வரலாற்றில், தேசிய ஸ்கைடிவிங் மையத்தில் நடந்த முதல் விமான விபத்து இது. இது மிகவும் சோகமான நாள்" என்று போயிடுவா மேயர் எட்சன் மார்குசோ கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT