உலகம்

முன்னாள் மனைவிக்கு பணம் கொடுக்கப்பட்டதா? பாகிஸ்தான் பிரதமர் மீது இம்ரான் கான் குற்றச்சாட்டு

1st May 2022 01:10 PM

ADVERTISEMENT

கடந்த 2018ஆம் ஆண்டு பொது தேர்தலின்போது, தனக்கு எதிராக புத்தகம் எழுத முன்னாள் மனைவி ரெஹ்மான் கானுக்கு ஷெரீப் குடும்பம் பணம் கொடுத்ததாக பாகிஸ்தான் பிரதமர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

தன்னை பற்றி தவறான தகவல்களை பரப்ப மாஃபியாக்கள் மீண்டும் முயற்சி செய்துவருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்தான் பஞ்சாபில் உள்ள முல்தானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான் தான், 2018ஆம் வெளியான புத்தகம் குறித்து மறைமுகமாக விமரிசித்தார். 

முதல் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித் குறித்து பேசிய அவர், "பிரிட்டனில் பிறந்து தொலைக்காட்சி நட்சத்திரமாக உள்ள அவர் வழக்குகளை சந்திக்க நேரிட்டது. யூதக் குடும்பத்தில் பிறந்து ஆதிக்கம் செலுத்துவதாக ஷெரீப் குடும்பம் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தியது.

இதையும் படிக்கநாடாளுமன்றத்தில் ஆபாச படத்தை பார்த்ததாக ஒப்புக்கொண்ட எம்பி ராஜிநாமா

ADVERTISEMENT

2018 தேர்தலில் எனக்கு எதிராக புத்தகம் எழுத பெண்ணுக்கு (ரெஹ்மான் கான்) பணம் கொடுத்தவர்கள் இவர்கள் (ஷெரீப் குடும்பம்). ஈத் பண்டிகைக்கு பிறகு மீண்டும் என்னை குறித்து தவறான தகவல்கள் பரப்பவுள்ளனர். அவர்களுக்காக என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது. நான் உயிருடன் இருக்கும் வரை அவர்களுக்கு எதிராக போராடுவேன்" என்றார்.

பாகிஸ்தானிய பிரித்தானிய பத்திரிகையாளராகவும் இயக்குநரகாவும் நூலாசிரியராகவும் உள்ள ரெஹ்மான் கான், தனது பெயரிலேயே 2018ஆம் ஆண்டு வெளியிட்ட புத்தகம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குறித்து விமரித்த அவர், "பஞ்சாப் முதல்வராக அவர் பொறுப்பு வகித்தபோதுதான் அதிக அளவில் என்கவுண்டர்கள் நடைபெற்றது. மாஃபியாக்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன்" என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT