உலகம்

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க இலங்கை சென்றடைந்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்

28th Mar 2022 11:01 AM

ADVERTISEMENT

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கா் நேற்று இலங்கை சென்றடைந்தார். 

கொழும்பு விமான நிலையத்தில் அந்நாட்டு அமைச்சர்கள் அவரை வரவேற்றனர். இதைத்தொடர்ந்து கொழும்பில் இன்று தொடங்கும் பிம்ஸ்டெக் அமைப்பு மாநாட்டில் ஜெய்சங்கா் பங்கேற்கிறார். 

இதையும் படிக்க- ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் மாணவர் கைது

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், இருதரப்பு விஜயம் மேற்கொண்டும் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவும் கொழும்பிற்கு வருகைதந்துள்ளேன். அடுத்த இரு நாட்களிலும் நடைபெறவிருக்கும் எனது கலந்துரையாடல்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT

இந்தப் பயணத்தின்போது இலங்கை தலைவா்களுடன் இருதரப்புப் பேச்சுவாா்த்தைகளில் அவா் ஈடுபடவுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். பிம்எஸ்டெக் அமைப்பில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மா், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT