உலகம்

உக்ரைன் போரில் இதுவரை 12 பத்திரிகையாளர்கள் பலி

28th Mar 2022 05:55 PM

ADVERTISEMENT

உக்ரைன் போரில் இதுவரை 12 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. உக்ரைனின் பல முக்கிய நகரங்களில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், உக்ரைனில் இதுவரை பத்திரிகையாளர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞர்(Prosecutor General) தெரிவித்துள்ளார். 

மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

இதுதவிர 56 ஊடகத்தினருக்கு எதிராக ரஷியா குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் இதில் 15 பேர் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த 15 பேரில் பிரிட்டன்- 4 பேர், செக் குடியரசு - 2, டென்மார்க் - 2, அமெரிக்கா -2, ஐக்கிய அரபு அமீரகம் - 2, சுவிட்சர்லாந்தில் ஒருவர் அடங்குவர். 

மேலும், ஊடக அலுவலகத் தாக்குதல், டிவி டவர் தாக்குதல் என பல வழக்குகள் பதியப்பட்டுள்ளன. உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு எதிராக 148 சட்ட விரோத நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT