கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் பகுதியான லுஹான்ஸ்கை ரஷியாவுடன் இணைப்பது குறித்து விரைவில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று அந்தப் பகுதி ஆட்சியாளா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து லுஹான்ஸ்க் ‘குடியரசு’ தலைவா் லியோனிட் பாசெச்னிக் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ரஷியாவின் ஒரு பகுதியாக லுஹான்ஸ்கை அறிவிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து பொதுமக்களின் கருத்தை அறிந்துகொள்வதற்காக கூடிய விரைவில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்றாா்.
கடந்த 2014-ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின்போது, உக்ரைன் ராணுவத்துக்கு எதிராக சண்டையிட்ட லியோனிட் படை, ரஷியா உதவியுடன் லுஹான்ஸ்க் பகுதியைக் கைப்பற்றியது.