உலகம்

உக்ரைன் போர்: கடும் சேதத்தைச் சந்தித்த மரியுபோல் நகரம்

25th Mar 2022 12:53 PM

ADVERTISEMENT

 

ரஷியப் படைகளின் தாக்குதலால் உக்ரைனின்  மரியுபோல் நகரம் கடுமையான சேதத்தை அடைந்துள்ளது.

ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தொடரும் இந்த போரில் ராணுவ வீரர்கள், மக்கள் என ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

உக்ரைனின் பல்வேறு முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷியப் படைகள் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

ADVERTISEMENT

மேலும், போரிலிருந்து பின்வாங்குவதில்லை என புதின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரஷியப் படைகளின் கடும் தாக்குதலால் உக்ரைனின்  மரியுபோல் நகரம் மோசமான சேதத்தை அடைந்துள்ளதாக உக்ரைன் கலாச்சாரத் துறை அமைச்சகம் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், போர் தாக்குதலில் நகரின் பல கட்டடங்கள் சேதமாகியுள்ளன.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT