உலகம்

உக்ரைன் போரில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி: ஐ.நா.தகவல்

25th Mar 2022 08:10 AM

ADVERTISEMENT

ரஷியாவின் தாக்குதலில் உக்ரைன் மக்கள் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஐ. நா.தகவல் தெரிவித்துள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. உக்ரைனில் பல்வேறு முக்கியப் பகுதிகளில் ரஷியா தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. முக்கியப் பகுதிகளை ரஷியா கைப்பற்றியுள்ள நிலையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்நிலையில், ரஷியாவின் தாக்குதலில் உக்ரைனில் உயிரிழந்துள்ள பொதுமக்களின் எண்ணிக்கை 1,000-யை தாண்டியுளளதாக உயிரிழந்துள்ளதாக ஐ. நா.மனித உரிமைகள் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுவரை குறைந்தது 1,035 உயிரிழப்பும் என்றும் 1,650 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. உயிரிழந்தவர்களில் குழந்தைகள் 90 பேர். மரியுபோல் உள்ளிட்ட நகரங்களில் சில தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படாததால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா. கூறியுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT