உலகம்

சீன விமான விபத்து: 2ஆவது கருப்புப் பெட்டியும் கண்டுபிடிப்பு!

25th Mar 2022 04:23 PM

ADVERTISEMENT

சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டாவது கருப்புப் பெட்டியும் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் தென்மேற்கு மாகாணமான யுன்னான் தலைநகர் குன்மிங்கிலிருந்து குவாங்ஜோ நகரை நோக்கி கடந்த திங்கள்கிழமை சென்ற போயிங் 737 ரக விமானம், வூஜோ நகரத்துக்கு உள்பட்ட டெங்ஷியான் மலைப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 123 பயணிகளும், 9 ஊழியர்களும் பயணித்தனர்.  

விபத்து நடைபெற்ற இடத்தில் இரு நாள்களாக மீட்புப் பணி நடைபெற்ற நிலையில், பயணிகளின் பணப் பைகள் (பர்ஸ்), ஏடிஎம் அட்டைகள், அலுவலக அடையாள அட்டைகளை மட்டுமே மீட்க முடிந்ததாகவும், பயணிகளில் ஒருவர்கூட உயிருடன் மீட்கப்படவில்லை என்றும் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க- செலவினங்களைக் குறைத்த சுகாதாரக் காப்பீட்டு திட்டம்: மத்திய அரசு

ADVERTISEMENT

ஏற்கெனே விபத்துக்குள்ளான விமானத்தின் இரு கருப்புப் பெட்டிகளில் ஒரு கருப்புப் பட்டி கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது மற்றொன்று கருப்புப் பெட்டியையும் மீட்புக்குழுவினர் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் விபத்துக்கு முன்னர் விமானத்தில் பதிவான உரையாடல்கள் குறித்து தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் ஒரு கருப்புப் பெட்டி விமானியின் அறையிலும், மற்றொன்று விமானத்தின் பின்பகுதியிலும் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT