உலகம்

தாய்லாந்து முதல் இந்தியா வரை: மனைவிக்காக 2 ஆயிரம் கி.மீ. கடலில் பயணிக்க முயன்ற வியத்நாம் கணவர்

25th Mar 2022 04:17 PM

ADVERTISEMENT

இந்தியாவின் மும்பையில் வேலை செய்து வரும் தனது மனைவியைப் பார்ப்பதற்காக தாய்லாந்திலிந்து இந்தியாவிற்கு ஒற்றைப் படகில் பயணித்து வந்த கணவரை கடற்படையினர் மீட்டனர்.

வியத்நாமைச் சேர்ந்த 37 வயதான ஹோ ஹோங் ஹங் மும்பையில் வேலை செய்து வரும் தனது மனைவியைப் பார்ப்பதற்காக மேற்கொண்ட பயணம் ஆச்சர்யமடையச் செய்துள்ளது.

இதையும் படிக்க | ஐபிஎல் போட்டியில் சாதிப்பாரா தமிழக வீரர் ஷாருக் கான்?

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தனது மனைவியைப் பார்க்க முடியாமல் தவித்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து தனது மனைவியைப் பார்க்க முடிவெடுத்து புறப்பட்ட ஹங் கடந்த வாரம் வியத்நாமிலிருந்து தாய்லாந்தின் பேங்காக்கிற்கு விமானம் மூலம் சென்றடைந்தார். அங்கிருந்து விமானம் மூலம் மும்பை செல்வதாக திட்டமிட்டிருந்த அவர் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டார்.

ADVERTISEMENT

இதனால் அதிர்ச்சியடைந்த ஹங் கடல் வழியாக பயணம் செய்ய திட்டமிட்டார். அதற்கான முன்னேற்பாடுகளுடன் சிறிய மீன்பிடி படகுடன் வங்காள விரிகுடாவை கடக்கும் முயற்சியில் கடந்த மார்ச் 5ஆம் தேதி இறங்கினார்.

இதையும் படிக்க | காவல்துறை முன் எஸ்.வி.சேகர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திசைக்காட்டி, மின்விளக்குகள், வரைபடம் என எந்தவித பயண உபகரணமுமின்றி பயணத்தைத் தொடங்கிய ஹங்கை சிமிலியன் தீவுகள் அருகே தாய்லாந்து கடலோர காவல்படையினர் மீட்டனர்.

தொடர்ந்து விசாரணைக்காக அவர் தாய்லாந்தின் பூகெட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த விவாகரம் தொடர்பாக வியத்நாம் மற்றும் இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தாய்லாந்து அரசு தூதரகங்களின் பதிலுக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT