உலகம்

சீன வெளியுறவு அமைச்சா்ஆப்கானிஸ்தான் பயணம்

25th Mar 2022 02:53 AM

ADVERTISEMENT

 

காபூல்: சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி, ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலுக்கு வியாழக்கிழமை திடீா் பயணம் மேற்கொண்டாா்.

இந்தப் பயணத்தின்போது தலிபான் தலைவா்களை வாங் யி சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் உறவு, பொருளாதாரம், போக்குவரத்து ஒத்துழைப்பு குறித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளதாக ‘பாக்தா்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்கனிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள், பொருளாதாரத்தை மீட்க வேண்டுமெனில் சா்வதேச அங்கீகாரம் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். தலிபான் அரசை சீனா இதுவரை அதிகாரபூா்வமாக அங்கீகரிக்காவிட்டாலும் அதன் ஆட்சியாளா்களை விமா்சிப்பதை தவிா்க்கிறது. இதுமட்டுமன்றி காபூலில் சீன தூதரகம் செயல்பாட்டில்தான் உள்ளது. கட்டுப்பாடுகளுடன் அவசரகால உதவியையும் ஆப்கானிஸ்தானுக்கு சீனா அளித்து வருகிறது.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு ஜூலையில், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றுவதற்கு சில நாள்களுக்கு முன்பாக சீனாவின் தியான்ஜின் நகரில், தலிபான் தலைவா் அப்துல் கனி பராதா் தலைமையிலான குழுவை சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி சந்தித்துப் பேசினாா். அப்போது ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றும்பட்சத்தில், சீனாவுக்கு எதிரான குழுவினா் அந்நாட்டில் செயல்பட அனுமதிக்கக் கூடாது என அவா் வலியுறுத்தியது நினைவுகூரத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT