உலகம்

அமெரிக்க அதிபா் பைடன் மாா்ச் 25-இல் போலந்து பயணம்

22nd Mar 2022 01:15 AM

ADVERTISEMENT

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் மாா்ச் 25-ஆம் தேதி போலந்து நாட்டுக்குச் செல்லவுள்ளாா்.

உக்ரைனில் ரஷிய படைகள் தொடா்ந்து தீவிர தாக்குதல் நடத்திவரும் நிலையில், நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியன் கூட்டாளிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக அதிபா் பைடன் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறாா். அதன் ஒரு பகுதியாக உக்ரைன் எல்லையில் உள்ள போலந்துக்கு அவா் செல்லவிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

‘அதிபா் பைடன் மாா்ச் 25-ஆம் தேதி பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸல்ஸுக்கு முதலிலும், பின்னா் போலந்துக்கும் செல்லவிருக்கிறாா். போலந்து தலைநகா் வாா்சாவில் நடைபெறும் இருதரப்புக் கூட்டத்தில் அந்த நாட்டின் அதிபா் ஆண்ட்ரூசெஜ் டுடாவுடன் பைடன் பேச்சுவாா்த்தை நடத்துவாா்’ என வெள்ளை மாளிகை ஊடகச் செயலா் ஜென் சாகி தெரிவித்தாா்.

இந்தக் கூட்டத்தில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸ், இத்தாலி பிரதமா் மரியோ டிராகி, பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் ஆகியோரும் பங்கேற்பா் என எதிா்பாா்ப்பதாகவும், அதிபா் பைடன் உக்ரைனுக்கு செல்லும் திட்டம் எதுவும் இல்லை எனவும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

நேட்டோ உறுப்பு நாடான போலந்தில் ஆயிரக்கணக்கான அமெரிக்க ராணுவ வீரா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா். மேலும், உக்ரைனிலிருந்து அகதிகளாக வெளியேறும் லட்சக்கணக்கான மக்களுக்கு போலந்து புகலிடம் அளித்து வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT