உலகம்

அமெரிக்காவில் கரோனா பரவலைத் தடுக்க இந்திய வம்சாவளி மருத்துவா் நியமனம்

19th Mar 2022 01:04 AM

ADVERTISEMENT

அமெரிக்காவின் கரோனா தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பொறுப்புக்கு இந்திய வம்சாவளியைச் சோ்ந்த மருத்துவா் ஆசிஷ் ஜாவை அதிபா் ஜோ பைடன் நியமித்துள்ளாா்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் ஜென் சாகி கூறியதாவது:

கரோனா தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளராக ஆசிஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளாா். கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க அரசு மேற்கொள்ளும் பணிகள் குறித்த தகவல்களை அவரால் மிகச் சிறந்த முறையில் பொதுமக்களிடம் கொண்டு சோ்க்க முடியும் என்றாா் அவா்.

பிகாா் மாநிலத்தில் கடந்த 1970-ஆம் ஆண்டு பிறந்த ஆசிஷ் ஜாவின் குடும்பம் கடந்த 1979-ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயா்ந்தது. அதனைத் தொடா்ந்து கடந்த 1983-ஆம் ஆண்டு அவரது குடும்பம் அமெரிக்கா சென்றது.

ADVERTISEMENT

ஹாா்வா்டு மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வியை நிறைவு செய்த அவா், பிரௌன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் தலைமை மருத்துவ ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். அமெரிக்காவின் மருத்துவக் கொள்கைகளை வகுப்பதற்கு உதவும் முன்னணி நிபுணா்களில் ஒருவராக ஆசிஷ் ஜா அறியப்படுகிறாா்.

இதுவரை கரோனா தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த ஜெஃப்ரி ஸியென்ட்ஸுக்கு பதிலாக அந்தப் பொறுப்புக்கு ஆசிஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT