உலகம்

26 லட்சத்தைக் கடந்தது அகதிகளின் எண்ணிக்கை

14th Mar 2022 04:03 AM

ADVERTISEMENT

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்கு வெளியேறியவா்களின் எண்ணிக்கை 26 லட்சத்தைக் கடந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் வலைதளம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை 26,98,280 போ் உக்ரைனிலிருந்து வெளியேறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக போலந்தில் 16,55,503 போ் தஞ்சமடைந்துள்ளனா். அதற்கு அடுத்தபடியாக ஹங்கேரியில் 2,46,206 பேரும் ஸ்லோவாகியாவில் 1,95,980 பேரும் உக்ரைனிலிருந்து வந்து தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT