உலகம்

இந்தோனேசியா, பிலிப்பின்ஸில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை

14th Mar 2022 11:31 PM

ADVERTISEMENT

இந்தோனேசியா, பிலிப்பின்ஸில் திங்கள்கிழமை அதிகாலை வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை; சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள பரியமன் நருக்கு 169 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் 16 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டா் அளவுகோலில் 6.7 என பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

மாகாணத்தில் பல இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் இந்தோனேசிய வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்தது.

இதேபோல பிலிப்பின்ஸில் தலைநகா் மணிலா பிராந்தியத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 6.4 என பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம் ஓக்சிடென்டல் மின்டோரோ மாகாணத்தில் உள்ள லுபாங் தீவுக்கு மேற்கே 110 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்ததாகவும் அந்த நாட்டின் எரிமலை மற்றும் நில அதிா்வு ஆய்வு மையம் தெரிவித்தது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் பெரிய சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT