உலகம்

தென் கொரிய அதிபர் தேர்தலில் யூன் சுக் யோல் வெற்றி

10th Mar 2022 12:35 PM

ADVERTISEMENT

ஆசிய கண்டத்தில் நான்காவது பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக தென் கொரிய உள்ளது. அங்கு நடைபெற்ற அதிபர் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் யூன் சுக் யோல் வெற்றிபெற்றதாக யோன்ஹாப் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

அரசில் எந்த விதமான பொறுப்பையும் வகிக்காத அவர், அரசு தரப்பின் மூத்த வழக்கறிஞராக பொறுப்பு வகித்துவந்துள்ளார். கடுமையான போட்டி நிலவிய நிலையில், வியாழக்கிழமையன்று முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில், ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் லீ ஜே-மியுங்கை தோற்கடித்து யூன் வெற்றிபெற்றுள்ளார்.  

தென் கொரிய தேசிய நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசிய அவர், "இது தென் கொரிய மக்களின் வெற்றி" என்றார்.

தேர்தல் பிரசாரத்தின்போது இரண்டு கட்சி வேட்பாளர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக திட்டி கொண்டனர். இதற்கு மத்தியில் நடைபெற்ற தேர்தலில் 77.1 சதவிகித வாக்குகள் பதிவாகிவாகின.  

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT