உலகம்

மேலும் 6 பாதுகாப்பு வழித்தடங்களை உருவாக்க உக்ரைன் திட்டம்

10th Mar 2022 03:47 PM

ADVERTISEMENT


கீவ்: உக்ரைனில், ரஷிய படைகள் கடுமையாக போர் புரிந்து வரும் நகரங்களில் சிக்கியிருக்கும் மனிதர்கள் பத்திரமாக வெளியேற வசதியாக மேலும் 6 பாதுகாப்பு வழித்தடங்கள் உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அந்நாட்டு அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

விடியோ வாயிலாக பேசிய அதிபர், சுமி, கீவ் மற்றும் எனர்கோடர் நகரங்களிலிருந்து மூன்று பாதகாப்பு வழித்தடங்களை எப்படியோ உருவாக்கிவிட்டோம். இதன் வழியாக 35 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் கிடைத்தன.

இதையும் படிக்க : 5 மாநில தேர்தல் முடிவுகள்: செய்திகள் உடனுக்குடன்

இந்த நிலையில், மேலும் புதிதாக 6 பாதுகாப்பு வழித்தடங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இதன் வழியாக மரியுபோல், இஸியம், வோல்னோவகா ஆகிய நகரிலிருக்கும் மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட இது தேவைப்படும் என்று கருதுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ரஷிய படைகள் கடுமையான குண்டு வீச்சுத் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருந்த நிலையில்தான், சுமி பகுதியிலிருந்து சுமார் 5000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்  என்றும் அதிபர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் பொதுமக்கள் வெளியேறும் வகையில் ஏற்படுத்தப்படும் பாதுகாப்பு வழித்தடங்களில் புதன்கிழமை சண்டைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. உக்ரைன், ரஷியா இரு தரப்பினரும் இதற்கு ஒப்புக்கொண்டனா்.

உக்ரைனில் ரஷியா நடத்திவரும் தாக்குதல் இரு வாரங்களைக் கடந்துள்ளது. கடும் சண்டை நடைபெறும் இடங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேறும் வகையில் பாதுகாப்பு வழித்தடங்களை ஏற்படுத்துவதற்காக ஏற்கெனவே இருமுறை அறிவிக்கப்பட்ட சண்டைநிறுத்தம் தோல்வியடைந்தது. ரஷிய எல்லையையொட்டியுள்ள சுமி நகரிலிருந்து தென்மேற்கு நகரமான போல்டாவா வரை செவ்வாய்க்கிழமை ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு வழித்தடம் வழியாக இந்திய மாணவா்கள் உள்பட 5,000 போ் வெளியேற்றப்பட்டனா்.

இந்நிலையில், பல்வேறு வழித்தடங்களில் பொதுமக்கள் வெளியேறுவதற்காக புதன்கிழமை காலை 9 மணிமுதல் இரவு 9 மணி வரை சண்டைநிறுத்தத்தை உக்ரைன் அறிவித்தது. இதற்கு ரஷியாவும் ஒப்புக்கொண்டது.

உலகின் 2-ஆவது பெரிய வல்லரசாக விளங்கிய சோவியத் யூனியன் மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு நேட்டோ.

பின்னா் சோவியத் யூனியன் சிதறி வலுவிழந்த நிலையிலும் அந்த அமைப்பு தன்னை விரிவுபடுத்தி வந்தது. எந்த சோவியத் யூனியனுக்கு எதிராக நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டதோ, அதே சோவியத் யூனியனில் அங்கம் வகித்த சில நாடுகளையும் அந்த அமைப்பு இணைத்துக்கொண்டு கிழக்கு ஐரோப்பாவில் தனது ஆதிகத்தை விரிவுபடுத்தி வந்தது.

இதற்கு ரஷியா கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தச் சூழலில், நேட்டோவில் தங்களது மிக நெருங்கிய நாடான உக்ரைன் இணைவது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது. எனவே, உக்ரைனை தங்களுடன் இணைத்துக்கொள்ள மாட்டோம் என்று நேட்டோ அமைப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு அமெரிக்காவும் நேட்டோவும் சம்மதிக்கவில்லை.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையில் பல வாரங்களாகப் படைக் குவிப்பில் ஈடுபட்டு வந்த ரஷியா, தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களை உக்ரைன் ராணுவத்திடமிருந்து பாதுகாப்பதாகக் கூறி அந்தப் பகுதிகளுக்கு தனது படைகளை ரஷியா கடந்த மாதம் 24-ஆம் தேதி அனுப்பியது.

அதன் தொடா்ச்சியாக, தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிவளைத்து ரஷியப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பொதுமக்கள் உள்பட பலா் உயிரிழந்தனா்.

Tags : Ukraine
ADVERTISEMENT
ADVERTISEMENT