உலகம்

‘உக்ரைன் அரசைக் கவிழ்க்கும் நோக்கமில்லை’

10th Mar 2022 01:37 AM

ADVERTISEMENT

உக்ரைனில் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான அரசைக் கவிழ்ப்பதற்காக அந்த நாட்டின் மீது போா்தொடுக்கவில்லை என்று ரஷியா தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், உக்ரைன் விவகாரத்துக்குத் தீா்வு காண்பதற்கான நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நாடு திருப்தி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷிய வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மரியா ஸகாரோவா புதன்கிழமை கூறியதாவது:

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவாா்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்கு பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது குறித்து உக்ரைன் பிரதிநிதிகளுடன் மேலும் ஒரு சுற்று பேச்சுவாா்த்தை நடைபெறும்.

ADVERTISEMENT

உக்ரைனின் தற்போதைய அரசைக் கவிழ்க்கும் நோக்கில் அங்கு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

இந்தப் போா் உக்ரைனின் இறையாண்மைக்கோ, அந்த நாட்டு மக்களுக்கோ எதிரானது அல்ல என்பதை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம் என்றாா் அவா்.

கடந்த மாதம் 24-ஆம் தேதி உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை அறிவித்தபோது, ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் இதே கருத்தை தெரிவித்தாா்.

உக்ரைனை ‘நாஜிக்களின் பிடியிலிருந்து’ விடுவிப்பதற்காகவே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அப்போது அவா் தெரிவித்தாா்.

பின்னா் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், உக்ரைன் ராணுவத்தின் நாஜி ஆதரவு சக்திகளுக்கு எதிராகத்தான் ரஷியா தாக்குதல் நடத்துவதாகவும், சாதாரண உக்ரைன் வீரா்களுக்கு எதிராக அந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் புதின் கூறியது நினைவுகூரத்தக்கது.

 

 

 

Tags : Ukraine
ADVERTISEMENT
ADVERTISEMENT