உலகம்

ரஷியாவிலிருந்து வெளியேறிய மெக்டொனால்ட், பெப்சி

10th Mar 2022 12:45 AM

ADVERTISEMENT

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ளதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், ரஷியாவில் தங்களது செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அமெரிக்க முதன்மை வா்த்தக நிறுவனங்களான மெக்டொனால்ட்ஸ், ஸ்டாா்பக்ஸ், கோகோ-கோலா, பெப்சிகோ, ஜெனரல் எலக்ட்ரிக் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ரஷியாவில் செயல்பட்டு வரும் தங்களது 850 கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டாலும், அவற்றில் பணியாற்றி வருந்த 62,000 பணியாளா்களுக்கு தொடா்ந்து ஊதியம் வழங்கப்படும் என்று மெக்டொனால்ட்ஸ் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, பணப்பரிவா்த்தனை அட்டை சேவை நிறுவனங்களான மாஸ்டா்காா்ட், விசா உள்ளிட்ட நிறுவநங்கள் ரஷியாவில் செயல்பாட்டை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT