உலகம்

தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷியா: உக்ரைனில் 3 மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சு

10th Mar 2022 01:40 PM

ADVERTISEMENT


மரியுபோல்: உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கும் ரஷிய படைகள், துறைமுக நகரமான மரியுபோல் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது.

மரியுபோலில் அமைந்திருக்கும் மகப்பேறு மருத்துவமனை மீது ரஷிய படைகள் நடத்திய கடுமையான தாக்குதலில், பிரசவத்துக்காகக் காத்திருந்த பெண்கள் குண்டடிபட்டுள்ளனர். பிறந்த குழந்தைகள் பலவும் கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க... உக்ரைன் போா்- இதுவரை...

மரியுபோல் மட்டுமல்லாமல், கீவ் நகரில் அமைந்திருக்கும் இரண்டு மருத்துவமனைகள் மீதும் ரஷிய படைகள் வெடிகுண்டுகளை வீசியதில், அங்கும் பலத்த சேதம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ரஷிய படைகள் உக்ரைன் மீது படையெடுப்பைத்தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகும் நிலையில், இதுவரை உக்ரைனில் உள்ள 18 மருத்துவமனைகள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக இதுவரை கிடைத்த புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT