உலகம்

நேபாளம்: பேருந்து கவிழ்ந்து விபத்து; 2 குழந்தைகள் உள்பட 14 பேர் பலி

10th Mar 2022 04:11 PM

ADVERTISEMENT

காத்மாண்டு: கிழக்கு நேபாளத்தின் சங்குவாசபா மாவட்டத்தில் இன்று நடந்த சாலை விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட  14 பேர் பலியாகினர். மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் 5 பேர் விமானம் மூலம்  சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சங்குவாசபாவில் இருந்து டமாக் நோக்கிச் சென்ற பேருந்து, மதி நகரில் காலை 7 மணியளவில் விபத்துக்குள்ளானது என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துணை காவல் ஆய்வாளர் லால் த்வாஜ் சுபேதி இறந்த 14 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டு அவர்களின் அடையாளங்களை கண்டறிந்தார்.

அதிவேகமாக பேருந்து சென்றதால்  விபத்து ஏற்பட்டிருக்கலாம் என  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

பேருந்தில்  19 முதல் 21 பேர் பயணம் செய்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  காயமடைந்தவர்கள் செயின்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT