உலகம்

ஆப்கானிஸ்தானில் ஐநாவின் பங்கு என்ன? அமெரிக்க, ரஷியாவுக்கிடையே கருத்து மோதல்

3rd Mar 2022 12:04 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் ஐநாவின் பங்கு குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், அமெரிக்க, ரஷிய நாடுகள் நேர் எதிர் கருத்துகளை தெரிவித்துள்ளது. ரஷியாவின் விருப்பத்திற்கு எதிராக மனித உரிமைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கருத்து கூறியுள்ளது.

ஐநாவின் அரசியல் திட்டத்தை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 17ஆம் தேதியோடு நிறைவுபெறும் நிலையில், மனித உரிமைகள் தொடர்பான பணிகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டியதற்கான முக்கியத்துவம் குறித்து ஐநாவில் அமெரிக்கா எடுத்துரைத்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷிய துணை தூதர் அன்னா எவ்ஸ்டிக்னீவா, "திட்டத்தில் மனித உரிமை தொடர்பான கூறுகளை வலுப்படுத்த வேண்டும் என்பதை ரஷியா ஏற்று கொள்ளாது. மனித உரிமைகளை மனிதாபிமான உதவிகளோடு ஒப்பிடுவதை எதிர்கிறோம். 

ஆப்கானியர்களுக்கு உதவத் தயாராக இல்லாதவர்களின் நலன்களைப் பூர்த்தி செய்ய இந்த திட்டம் உதவிடக் கூடாது" என்றார்.

ADVERTISEMENT

இதற்கு மறுப்பு தெரிவித்த ஐநாவுக்கான அமெரிக்க தூதர் ஜெஃப்ரி டிலாரன்டிஸ், "திட்டத்தின் மனித உரிமைகள் கண்காணிப்பு செயல்பாடுகளை அமெரிக்க ஆதரிக்கிறது. அதேபோல, மனிதாபிமானத்தை கருத்தில் கொண்டு ஒருங்கிணைக்க வேண்டிய பங்கை ஐநா ஏற்க வேண்டும் என்பதை அமெரிக்கா ஆதரிக்கிறது" என்றார்.

இதையும் படிக்கஉக்ரைனில் இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாக உள்ளார்களா? வெளியுறவுத்துறை விளக்கம்

குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து பேசிய அமெரிக்கா, பொது வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பெண்களின் சம பங்களிப்பை ஊக்குவிக்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

பின்னர், சீனாவை விமிரித்த அமெரிக்கா, "ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துவதை விட, அமெரிக்காவின் நடவடிக்கைகளை விமர்சிப்பதில் சீனா அதிக நேரத்தை செலவிடுவது பரிதாபமாக உள்ளது" என்றார்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT