உலகம்

எஸ்-400 ஏவுகணைகளை ரஷியாவிடமிருந்து வாங்கும் இந்தியா...நெருக்கடி தருமா அமெரிக்கா?

3rd Mar 2022 04:36 PM

ADVERTISEMENT

அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக திகழும் இந்தியா, ரஷியாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஈரான், வடகொரியா, ரஷியா ஆகிய நாடுகளுடன் பரிவர்த்தனையில் ஈடுபடும் நாடுகளுக்கு அமெரிக்க தடைகளை விதித்துவருகிறது.

இதற்கு மத்தியில், அமெரிக்காவின் எதிரிகளை எதிர்க்கும் தடைகள் சட்டத்தின் மூலம் ஈரான், வடகொரியா, ரஷியா ஆகிய நாடுகளுடன் பரிவர்த்தனையில் ஈடுபடும் நாடுகளுக்கு அமெரிக்க தடைகளை விதித்துவருகிறது.

கடந்த 2014இல், கிரிமியாவை ரஷியா இணைத்து கொண்டதற்கும் 2016இல் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலடியாக அமெரிக்க இச்சட்டத்தை கொண்டு வந்தது. ரஷியாவிடம் பாதுகாப்பு ஆயுதங்களை வாங்கும் நாடுகள் மீது தடைகளை விதிக்க அமெரிக்க சட்டம் வழிவகுக்கிறது. 

அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு துணைக்குழு உறுப்பனர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட தெற்கு மற்றும் மத்திய இந்தியாவுக்கான துணை செயலாளர் டொனால்ட் லுவிடம், இச்சட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

ADVERTISEMENT

அதற்கு பதிலளித்த அவர், "சிஏஏடிஎஸ்ஏ சட்டத்தை முழுமையாக பின்பற்றி செயல்படுத்தும் என்றும், அவற்றில் ஏதேனும் ஒன்றை நாம் முன்னெடுத்துச் செல்லும்போது நாடாளுமன்றத்துடன் கலந்தாலோசிக்கும் என்றும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். 

இதையும் படிக்க | உக்ரைனில் இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாக உள்ளார்களா? வெளியுறவுத்துறை விளக்கம்

துரதிருஷ்டவசமாக என்னால் சொல்ல முடியாதது என்னவென்றால், நட்பு நாடுகளுக்கு விலக்கு அளிப்பது, பொருளாதாரத் தடைகள்  ரஷியாவின் உக்ரைன் படையெடுப்பு ஆகிய விவகாரங்களில் அதிபர் அல்லது வெளியுறவுத்துறை அமைச்சர்தான் முடிவுகளை முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும்.
 
இந்தியா இப்போது எங்களின் முக்கியமான பாதுகாப்பு கூட்டாளியாக உள்ளது. அந்த கூட்டாண்மையை இந்தியா முன்னோக்கி நகர்த்துவதை நாங்கள் மதிக்கிறோம். ரஷியா கடுமையான விமரிசனங்களை மேற்கொண்டு வரும் சூழலில் அதனுடன் நெருக்கம் காட்டாமல் தள்ளி செல்ல இந்தியாவுக்கு நேரம் வந்துவிட்டது என நம்புகிறேன்" என்றார்.

ஐநாவில் ரஷியாவை கண்டிக்கும் தீர்மானத்தில் இந்தியா கலந்து கொள்ளாததற்கு அமெரிக்க கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT