உலகம்

அனைத்து முனைகளிலும் இந்தியாவை எரிச்சலூட்டும் சீனா: அமெரிக்கா

3rd Mar 2022 02:39 PM

ADVERTISEMENT

அமெரிக்காவை எரிச்சலூட்டுவது போல இந்தியாவையும் அனைத்து முனைகளிலும் சீனா எரிச்சலூட்டிவருகிறது என தெற்கு மற்றும் மத்திய இந்தியாவுக்கான துணை செயலாளர் டொனால்ட் லு தெரிவித்துள்ளார்.

கிழக்கு, தெற்கு, மத்திய ஆசிய மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து அமெரிக்க செனட் சபை துணை குழு உறுப்பினர்களிடம் உரையாற்றிய டொனால்ட், "சீனாவின் ஆத்திரமூட்டும் செயல்களை தடுக்க இந்தியாவின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்துவதை மேம்படுத்தி விரைவுபடுத்த அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது. சீனாவின் ஆத்திரமூட்டும் செயல்கள் அதிகரித்துவரும் நிலையில், அமெரிக்காவுக்கு சவால் விடுவது போல, ஒவ்வொரு முனைகளிலும் இந்தியாவைத் சீண்டி வருகிறது.

இந்திய எல்லையில் நடந்த தாக்குதலின்போது 20 இந்திய வீரர்களின் மரணம் அடைந்தனர். இவர்களின் மரணத்திற்கு காரணமான படைக்குழு தளபதியை 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தீபமேந்த வைத்ததையடுத்து, பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா புறக்கணித்தது. 

வலுவான கடற்படை ஒத்துழைப்பு, மேம்பட்ட தகவல் மற்றும் உளவுத்துறை பகிர்வு, விண்வெளி மற்றும் சைபர்ஸ்பேஸ் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம், எங்களின் முக்கிய பாதுகாப்பு கூட்டணியில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கும், சீனாவின் ஆத்திரமூட்டும் செயல்களை தடுக்கவும் இந்தியாவின் திறனை வலுப்படுத்துவதற்கும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

ADVERTISEMENT

சமீத்தில், மெல்போர்னில் குவாட் நாடுகளின் அமைச்சர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதுகுறித்து பேசிய அவர், "குவாட் எந்தளவுக்கு சாதித்துவருகிறது, சுதந்திரமான இந்தோ - பசிபிக் பிராந்தியத்திற்கு ஆதரவு அளிப்பதில் குவாட் கூட்டு நாடுகளின் உறுதி ஆகியவையால் ஈர்க்கப்பட்டுள்ளேன்.

இதையும் படிக்கஉக்ரைனில் இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாக உள்ளார்களா? வெளியுறவுத்துறை விளக்கம்

உலகிற்கு 1 பில்லியன் கரோனா தடுப்பூசிகளை வழங்கும் இலக்கை அடைவதில் குவாட் மிகப்பெரிய முன்னேற்றங்களைச் செய்து வருகிறது" என்றார்.

கிழக்கு லடாக் எல்லை பகுதிக்கு ராணுவத்தை அழைத்து வரக்கூடாது என போடப்பட்ட ஒப்பந்தத்தை சீனா மீறியுள்ள நிலையில், இந்தியாவுடனான உறவு கடினமான கட்டத்தை எட்டியுள்ளது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT