உலகம்

கெர்சன் நகரைக் ரஷிய ராணுவம் கைப்பற்றியதாக உக்ரைன் அறிவிப்பு

3rd Mar 2022 07:46 AM

ADVERTISEMENT

 

உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகரை ரஷிய ராணுவம் முழுவதுமாக கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 8-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷியப் படைகள் வேகமாக முன்னேறி உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகின்றன. 

ஏற்கெனவே ரஷிய ராணுவம், உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் நகருக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகருக்குள் நுழைந்த ரஷிய ராணுவம் நேற்று கைப்பற்றியதாக அறிவித்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், ரஷிய படைகள் கெர்சன் நகரை கைப்பற்றியதை உக்ரைன் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் கெர்சன் நகரில்தான் கப்பல் கட்டும் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க | ஐ.நா. பொதுச் சபையில் ரஷியாவுக்கு எதிரான தீா்மானம்: 3-வது முறையாக இந்தியா புறக்கணிப்பு

ADVERTISEMENT
ADVERTISEMENT