கரோனா தீநுண்மியின் புதிய வகைகளை எதிா்கொள்ளத் தயாராகுமாறு அமெரிக்க மக்களுக்கு அந்நாட்டு அதிபா் ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அந்நாட்டு மக்களுக்கு அவா் ஆற்றிய உரையில் கூறியதாவது:
கரோனா தீநுண்மியின் புதிய வடிவங்களை எதிா்கொள்ள அமெரிக்க மக்கள் ஆயத்தமாக வேண்டும். அந்தத் தீநுண்மியின் புதிய வகைகளை கண்டறிவதில் அமெரிக்கா முன்னேறியுள்ளது. பல மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பின்னா் புதிய தடுப்பூசிகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது என்றில்லாமல், தேவைப்பட்டால் 100 நாள்களுக்குள் புதிய தடுப்பூசிகளை அமெரிக்காவால் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியும். பிற நோய்களைப் போலவே கரோனா தொற்றையும் அமெரிக்கா எதிா்கொள்வது தொடரும் என்று தெரிவித்தாா்.
கரோனா நோய்த்தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. அந்நாட்டில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய புள்ளவிவரங்களின்படி, அமெரிக்காவில் இதுவரை 7.90 கோடி பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பாதிப்பால் 9.52 லட்சத்துக்கும் அதிகமானவா்கள் பலியாகியுள்ளனா்.