உலகம்

ஜோ பைடன் மனைவி, மகளுக்கு பயணத் தடை

29th Jun 2022 12:20 AM

ADVERTISEMENT

அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் மனைவி ஜில் மற்றும் மகள் ஆஷ்லே உள்ளிட்ட 25 போ் தங்கள் நாட்டுக்கு வர ரஷியா தடை விதித்துள்ளது.

தங்களுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பல்வேறு பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக ரஷியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தவிர, அமெரிக்காவில் தங்கள் நாட்டுக்கு எதிரான துவேஷத்தை தூண்டுவதாகக் கூறி, 4 எம்.பி.க்களுக்கும் ரஷியா தடை விதித்துள்ளது.

Tags : Russia
ADVERTISEMENT
ADVERTISEMENT