உலகம்

'புதின் பெண்ணாக இருந்திருந்தால்...’: போரிஸ் ஜான்சன் கடும் விமர்சனம்

DIN

உக்ரைனில் போரைத் துவங்கிய ரஷிய அதிபர் புதினை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விமர்சித்துள்ளார்.

கிழக்கு உக்ரைனில் முக்கியத்துவம் வாய்ந்த செவெரோடொனட்ஸ்க் நகரை ரஷிய படை முழுமையாகக் கைப்பற்றிய நிலையில், அருகில் உள்ள லிசிசான்ஸ்க் நகரிலும் தரைவழி மற்றும் வான்வழியாக குண்டுமழை பொழிந்து வருகிறது.

லுஹான்ஸ்க் மாகாணத்தில் உக்ரைன் ராணுவத்தின் வசமிருந்த கடைசி பெரிய நகரான செவெரோடொனட்ஸ்க் ரஷியாவிடம் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக வீழ்ந்தது. அதன் அருகேயுள்ள லிசிசான்ஸ்க் நகரிலும் நுழைந்த ரஷிய படையினா், திங்கள்கிழமை அந்த நகரத்தின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியதாக லுஹான்ஸ்க் ஆளுநா் சொ்கி ஹைடாய் தெரிவித்தாா்.

மேலும், செவெரோடொனட்ஸ்க் நகரைக் கைப்பற்றியதைத் தொடா்ந்து, லிசிசான்ஸ்க் நகரில் ரஷிய படைகள் தரை வழியாகவும், வான் வழியாகவும் குண்டுமழை பொழிந்தன. நகரை தென்பகுதியிலிருந்து துண்டிக்கும் வகையில், ராக்கெட் தாக்குதல்கள் மூலம் அனைத்தையும் அழித்து வருகின்றனா்.

குறிப்பாக, நேற்று முன்தினம்(திங்கள்கிழமை) ரஷிய ஏவுகணைத் தாக்குதலால் கிரெமன்சுக் நகரில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்தவர்களில் 16 பேர் உயிரிழந்ததாகவும் 59 பேர் படுகாயமடைந்ததாகவும் உக்ரைன் பாதுகாப்புத் துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் “ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மட்டும் பெண்ணாகப் இருந்திருந்தால் பைத்தியகாரத்தனமான இந்த வன்முறைப் போரைத் துவங்கியிருக்க மாட்டார். இது மோசமான ஆண்மைத்தனத்துக்கு சரியான உதாரணம்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Another act of the russian genocide of the Ukrainian people. This time the ruscists targeted a mall in #Kremenchuk, in the afternoon when it is always especially crowded. The war criminals wanted to kill the civilians, deliberately aiming for the maximum number of casualties. pic.twitter.com/3PbCnjc7PU

— Defence of Ukraine (@DefenceU) June 27, 2022

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் அபாயம்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

மே மாத பலன்கள்: மகரம்

மே மாத பலன்கள்: தனுசு

மே மாத பலன்கள்: விருச்சிகம்

மே மாத பலன்கள்: துலாம்

SCROLL FOR NEXT