உலகம்

பிரிட்டனில் 1076 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு

29th Jun 2022 03:57 PM

ADVERTISEMENT

 

பிரிட்டனில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000ஐத் தாண்டியுள்ளது. 

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதார பாதுகாப்பு அமைப்பு (யுகேஹெச்எஸ்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஜூன் 26 வரை குரங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,076 ஆக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

இதில், 27 ஸ்காட்லாந்திலும், 5 வடக்கு அயர்லாந்திலும், 9 வேல்ஸில் மற்றும் 1,035 இங்கிலாந்தில் பதிவாகியுள்ளன.

உலகில் மொத்தம் 3,413 பேர் குரங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஐரோப்பிய பிராந்தியத்தில் 2,933 வழக்குகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மொத்தத்தில் சுமார் 86 சதவீதமாகும். 

வரும் நாட்களில் இந்த வழக்குகள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக யுகேஹெச்எஸ்ஏ-வின் இயக்குனர் சோபியா மக்கி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT