உலகம்

கொலம்பியா சிறையில் தீ விபத்து: 51 பேர் பலி, 24 பேர் காயம்

29th Jun 2022 12:01 PM

ADVERTISEMENT

 

மேற்கு கொலம்பியா நகரமான துலுவாவில் உள்ள சிறைச்சாலையில் கலவரத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் 51 கைதிகள் உடல் கருகி உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். 

கொலம்பியா நீதி அமைச்சர் வில்சன் ரூயிஸின் கூற்றுப்படி, 

கொலம்பியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள துலுவா நகரில் உள்ள சிறைச்சாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறைக்குள் கைதிகளுக்கு இடையே கலவரம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறையில் உள்ள சிலர் தீயை வைத்துள்ளனர். இந்த தீயானது மளமளவென சிறைச்சாலையின் பல அறைகளுக்கு பரவியது. 

நிலைமையை கட்டுப்படுத்த இயலாமல், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இதற்குள் சிறையிலிருந்து வெளியே தப்பிக்க இயலாமல் 51 கைதிகள் தீயில் சிக்கி உடல் கருகி பலியாகினர். மேலும், 24 பேர் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்கள் அருகில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சிறையை சூறையாடி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT