உலகம்

ஜப்பானில் 150 ஆண்டுகள் இல்லாத அளவு வெப்பநிலை: மக்கள் அவதி

29th Jun 2022 01:35 PM

ADVERTISEMENT

ஜப்பானில் 150 ஆண்டுகள் இல்லாத அளவு வெப்ப அலையின் தாக்கம் பதிவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தின் காரணமாக வெப்ப அலைகளின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவு பதிவாகி வருகிறது. அதன் ஒருபகுதியாக ஜப்பானில் பல்வேறு நகரங்களில் வெப்பநிலையானது உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | காலநிலை மாற்றத்தால் இடம்பெயரும் மக்கள்: முன்னணியில் இந்தியா

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் புதன்கிழமை 37 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இது கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவு ஜூன் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும். தொடர்ந்து வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை முறையே 36 டிகிரி செல்சியஸ் மற்றும் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | உறக்கத்தைக் கெடுக்கும் காலநிலை மாற்றம்: ஆய்வு முடிவால் அதிர்ச்சி

அதிகளவு வெப்பநிலை பதிவாகிவருவது நகரின் மின் தேவையை அதிகரித்துள்ளதாகவும், இதனால் மக்கள் தங்களது மின்பயன்பாட்டை சிக்கனமாக கையாளவும் அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.

இதற்காக மாலை 3 மணி முதல் தேவையற்ற விளக்குகளை அணைக்குமாறு அறிவுறுத்தியுள்ள ஜப்பான் அரசு அந்நேரங்களில் குளிர்சாதனக் கருவிகளை மட்டும் பயன்படுத்த வலியுறுத்தியுள்ளது. டோக்கியோவில் அதிகரித்துள்ள வெப்ப அலையின் தாக்கத்தால் இதுவரை 76 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT