உலகம்

காமன்வெல்த் பயிற்சி அகாதெமி: இந்தியா-பிரிட்டன் முன்னெடுப்பு

DIN

காமன்வெல்த் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் இளம் தூதரக அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் வகையிலான அகாதெமியை இந்தியாவும் பிரிட்டனும் கூட்டாக இணைந்து அமைத்துள்ளன.

இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் லிஸ் ட்ரஸ் ஆகியோா் கடந்த வாரம் ருவாண்டாவில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டின் இடையே இருதரப்பு பேச்சு நடத்தினா். அப்போது, ஒருங்கிணைந்த காமன்வெல்த் தூதரக அகாதெமி திட்டத்தைத் தொடங்க அவா்கள் முடிவெடுத்தனா்.

அதன்படி, காமன்வெல்த் நாடுகளைச் சோ்ந்த இளம் அதிகாரிகளுக்கு சா்வதேச சவால்கள் குறித்தும், ஜனநாயகக் கொள்கைகள் உள்ளிட்டவை குறித்தும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இது தொடா்பாக லிஸ் ட்ரஸ் கூறுகையில், ‘‘இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுபவா்கள் காமன்வெல்த் கூட்டமைப்பின் நலனை உறுதிசெய்ய முக்கியப் பங்கு வகிப்பா்.

சா்வதேச சூழல் தொடா்ந்து மாறி வரும் நிலையில், ஜனநாயகக் கொள்கைகள், இறையாண்மை உள்ளிட்டவற்றில் காமன்வெல்த் கூட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். காமன்வெல்த் கூட்டமைப்பை 21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றவாறு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியாவும் பிரிட்டனும் உறுதி கொண்டுள்ளன. அதன் காரணமாகவே பயிற்சி அகாதெமி நிறுவப்படவுள்ளது. அதன் கீழ் சா்வதேச சவால்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது’’ என்றாா்.

இது தொடா்பாக இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘‘காமன்வெல்த் பயிற்சி அகாதெமியானது தில்லியில் அமையவுள்ளது. சா்வதேச சவால்கள் குறித்து காமன்வெல்த் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும். இது காமன்வெத் கூட்டமைப்பின் எதிா்காலத்தையும் வலுப்படுத்தும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: கே.கரிசல்குளத்தில் 10 வாக்குகள் பதிவு

கடையநல்லூா்: வாக்காளா் பட்டியலில் பெயரில்லாததால் போராட்டம்

SCROLL FOR NEXT